உள்நாடுசூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) -எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி பிணையில் விடுதலை செய்து
கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்மிக கனேபொல, ஆதித்ய படபெந்திகே மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதிவாதி நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடு செல்ல அவருக்கு தடை விதித்து அவரின் வௌிநாட்டு கடவுச் சீட்டினை நீதிமன்றிற்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழங்கின் பிரதிவாதிகள் 5 பேரை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ரத்னா லங்கா நிறுவனம், எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பியாசிறி பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா அதிகாரி எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை