விளையாட்டு

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

(UDHAYAM, COLOMBO) – உலகில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும், ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சர்வதேச அணியில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் இலங்கை வீராங்கனை ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவதற்கு வழங்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் .

இதற்கமைவாக தர்ஜினி அவுஸ்ரேலியா சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார்.

ஆறுமாத கால ஒப்பந்தஅடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான திலக்காக ஜெனதாச வழங்கியிருந்தார்.

Related posts

அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்

மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது