உலகம்

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

(UTV| இந்தியா) – இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30 இன்று (17) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரான்சின் பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது

15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை