உள்நாடு

விமான நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகைத்தரும் அனைத்து விமானப் பயணிகளும் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று(16) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

குடிவரவு குடியகல்வு சோதனை நடவடிக்கைகளுக்கு போதியளவிலான அதிகாரிகளை உட்படுத்தி பயணிகளுக்கு ஏற்படும் தாமதங்களை இயன்றளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

விமான நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் மற்றும் வருகைத்தரும் பயணிகளுடன் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வாடகை வாகன வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக தனியான பிரிவொன்றினை நிர்மாணிக்குமாறு விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறிக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி விமான நிலையத்தின் வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் விமான நிலைய தலைவருக்கும் ஆளணியினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Related posts

கூட்டமைப்பில் மீண்டும் இணையுங்கள் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

editor

போதியளவு எண்ணெய் கிடைக்குமாயின் இன்று மின் வெட்டு அமுலாகாது

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில்