(UTV|அமெரிக்கா) – சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்று வந்த வர்த்தக போரால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒரு ஒப்பந்தம் என்றும், இதனால் இரு நாடுகளுக்குமான உறவு மேம்படும் என்றும், சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் எனவும், அறிவுசார் சொத்து தொடர்பான விதிமுறைகள் வலிமைப்படுத்தப்படும் எனவும் சீனா உறுதியளித்துள்ளது.