(UTV|கொழும்பு)- நாட்டில் சோளம் மற்றும் நிலக்கடலை இறக்குமதி தடை செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பயிரிடப்படக் கூடிய தானிய வகைகளின் இறக்குமதியை தவிர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இந்த தானிய வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மாத்திரம் அவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.