(UTV|கொழும்பு) – அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய(15) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
அரச தனியார் ஒத்துழைப்பிற்கான தேசிய நிறுவனம் திறைசேறி செயலகம் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனை சபையுடனும் சுமார் 20 பேரைக் கொண்ட பணியாளர் சபையொன்றைக் கொண்ட நிதியமைச்சின் அலகாக செயல்படுகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தினால் தமது செயற்பாட்டை முறையாக முன்னெடுப்பதற்கும் பணிகளை ஒன்றிணைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் குறித்த அலகினால் முன்னெடுக்கப்படும் கடமைகள் தேவை இல்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனத்தை மூடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக திறைசேறி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.