வணிகம்

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் பொறுப்பேற்பு

(UTV|கொழும்பு) – மாத்தறை – பெலியத்த ரயில் பாதையை மூன்று மாதத்திற்குள் ரயில்வே திணைக்களம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று பெலியத்த ரயில் நிலையத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு மேற்கொள்ளப்படும் ரயில் பாதை அமைக்கும் பணிகளை கண்காணித்தார்.

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் அமைப்புப் பணிகளை நிறைவு செய்து, அதனை ரயில்வே திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கவுள்ளதாகவும் குறித்த இந்த ரயில் பாதை அமைப்புப் பணிகளில் இடம்பெற்றுள்ள பாரிய குறைபாடுகளே இதற்கான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

சட்டவிரோத பொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு-மத்திய சுற்றாடல் அதிகார சபை

கோழி இறைச்சி மக்களை கூடுதலாக நோய்வாய்ப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு