உலகம்

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

(UTV|பாகிஸ்தான் ) – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை இரத்து செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், அவரது மரண தண்டனை இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – இந்தியாவில் பலி எண்ணிக்கை உயர்வு

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் விரைவில்

இந்தியாவில் ஒரே நாளில் 90,000 ஐ தாண்டிய தொற்றாளர்கள்