(UTV|ஈரான்) – ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் கருத்தை அந்நாட்டு காவல்துறை மறுத்துள்ளது.
ஈரானில் இருந்து புறப்பட்டு சென்ற யுக்ரேன் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பயணிகள் உயிரிழந்திருந்தனர்.
குறித்த விமானம் தமது நாட்டு இராணுவத்தினரால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானிய அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெரும் திரளான மக்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
இதன்படி, ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, தாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என ஈரான் காவல்துறை இன்று அறிவித்துள்ளது.