உலகம்

பிலிப்பைன்ஸில் எரிமலை சீற்றம் – 8000 பேர் வெளியேற்றம்

(UTV|பிலிப்பைன்ஸ் ) -பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பால் மலைப்பகுதியில் உள்ள 8 ஆயிரம் குடும்பத்தினைரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிமலையில் இருந்த வெளியேறும் சாம்பல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வீசப்படுவதால் காற்றின்வேகத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி வருகிறது.

இதனால் குறிப்பிட்ட பகுதியில் விமானங்கள் செல்வதற்கும் பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் எரிமலையை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் குழுவினர், அடுத்த சில வாரங்களில் டால் எரிமலை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

Related posts

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு பிடியாணை

editor

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய தீ