உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

(UTV|கொழும்பு ) – தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இன்று(13) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.

இன்று மற்றும் நாளை அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையிலுள்ள அரச சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(13) இலங்கைவரவுள்ளனர்.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்