வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பாக வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தனது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோசலிச ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி றென் டை குவான் (Tran Dai  Quang)  , இவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயன் பூ ரோன்ங் (Nguyen Phu Trong) தெரிவித்துள்ளனர்.

வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்த கவலைக்குரிய சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும் அரசாங்கமும் இலங்கையுடன் ஒன்றிணைந்துள்ளதாக வியட்நாம் ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் கருத்து தெரிவித்தனர்.

இவ்வாறான அனர்த்தம் எதிர்காலத்தில் இடம்பெறாது இருப்பதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது ஏதேனும் தேவைகள் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துதெரிவிக்கையில்,

அனுதாபம் தெரிவித்ததற்கும் தேவையான உதவியை வழங்குவதற்கும் முன்வந்தமை தொடர்பில் இலங்கை மக்கள் சார்பில் தாம் நன்றி தெரிவிப்பதாக இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

இலண்டன் பிரிஜ் : இலங்கையருக்கு பாதிப்பில்லை

හදිසි නීතිය මසකින් දීර්ඝ කිරීමට පාර්ලිමේන්තුව රැස්වෙයි.

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்