(UTV | இந்தியா) – ஹீரோக்களுக்கு இணையான அல்லது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில் அண்மை காலமாக அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தில் அஜித்துக்காக நடித்தபோதிலும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
தர்பார்
பிகில் படத்தில் விஜய்யை காதலிப்பதை தவிர நயன்தாராவுக்கு பெரிதாக வேலை இல்லை. இந்நிலையில் அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தர்பார் படத்தில் சுத்தமாக வேலை இல்லை. பட ரிலீஸுக்கு முன்பே யாரும் நயன்தாராவை கண்டுகொள்ளவில்லை. படம் வெளியான பிறகும் கண்டுகொள்ளவில்லை. காரணம் படத்தில் நயன்தாரா பெயருக்கு தான் ஹீரோயின்.
தர்பார் படத்தை பார்க்கும் அனைவரும் ரஜினி மற்றும் அவரின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் பற்றி தான் பேசுகிறார்கள். நயன்தாராவை திரையில் பார்த்துவிட்டு இதுக்கு இந்தம்மா இந்த படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள். நன்றாக நடிக்கத் தெரிந்த நயன்தாரா ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். என்ன தான் ரஜினிக்காக இறங்கி வந்திருந்தாலும் அதற்காக இந்த அளவுக்காக என்று நயன்தாரா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொள்கையை தளர்த்தி பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தது போதும் நயன்தாரா. இனியாவது வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்கும் படங்களில் மட்டும் நடிக்கவும். தர்பார் கொடுமையே கடைசியாக இருக்கட்டும். நடிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. நன்றாக நடிக்கும் திறமை இருந்தும் அதை இப்படி வீணாக்குவது நல்லது அல்ல என்று ரசிகர்கள் அக்கறையும் அறிவுரை வழங்கியுள்ளனர்.