(UTV |கொழும்பு ) – 2019 ஆம் ஆண்டில் நிறைவில் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த தொகை குறைவாகவே காணப்படுவாகவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற குண்டுத் தாக்குதலின் பின்பே சுற்றுலாப் பயணிகளில் வருகை குறைவடைந்துள்ளதாகவும், அந்த தாக்குதலுக்கு முற்பட்ட மூன்று மாதங்களிலும் சுற்றுலா பிரயாணிகளின் வருகை கனிசமான அதிகரிப்பை காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.