உள்நாடு

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்

(UTV|கொழும்பு)- தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் இதன்போது இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாமல் மீதான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம் : ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்தவுக்கு 19ஆம் திகதி அழைப்பு

ரிஷாதிற்கு எதிராக கருத்துத் தெரிவித்த விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு [VIDEO]

விஜயகலா மகேஸ்வரன் விசாரணை ஆணைக்குழுவில்