உள்நாடு

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பந்துல

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மாணவர்களுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அசாதாரணம் நேர இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

பகிடிவதை காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 200 மாணவர்கள் பலக்லைக்கழகத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழல் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் சித்திரக் கண்காட்சி.

நாட்டில் இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]