வகைப்படுத்தப்படாத

17 மாணவர்களை கொடூரமாக கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி பின்னணி

(UTV|AMERICA)-புளோரிடா துப்பாக்கிச் சூடு தொடர்பில் தீவிர விசாரணை

புளோரிடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மாணவன் தொடர்பில், அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் மீளாய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள உயர் கல்லூரி ஒன்றில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கல்லூரியின் பழைய மாணவரான 19 வயதுடைய, நிக்களஸ் க்ரூஸ் என்பவரே இந்தச் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகத்துக்குரியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் காரணமாக அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நிக்களஸ் க்ரூஸ் தொடர்பில் குறித்த கல்லூரி ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்திருந்ததாகவும், அவரை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அவர்கள் அறிவறுத்தியிருந்தாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தாம் ஒரு ‘தொழில்முறை பாடசாலை துப்பாக்கிதாரி’ (professional school shooter) ஆக வேண்டும் என கடந்த ஆண்டு யூடியூப் பதிவொன்றில் நிக்களஸ் க்ரூஸ் பதிவிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த யூடியூப் பதிவை பதிவிட்டவர் யார் என்பதை அப்போது முழுமையாக அடையாளம்காண முடியாதிருந்தாக புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போர்க்குற்ற வழக்கில் போஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை..

One-day service resumes – Registration of Persons Dept.

ஈஸியாக சில்லி சிக்கன் செய்வது எப்படி?