உள்நாடு

அடையாள அட்டையை வழங்க விசேட வேலைத்திட்டம்

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது

இதுவரையில் தேசிய அட்டையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பரீட்சாத்திகள் உரிய வகையில் அதனை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனை ஆட்பதிவு திணைக்களம் அமைந்துள்ள பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு அல்லது வடமேல், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கனடிய ஊடகங்களை பாராட்டி கருத்து தெரிவித்த ஹரீன்