உள்நாடு

ரஞ்சனிடமிருந்து மீட்கப்பட்ட ஒலி நாடா தொடர்பில் உடனடி விவாதம் தேவை

(UTV | கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து மீட்கப்பட்ட ஒலி நாடா தொடர்பில் உடனடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு சபை முதல்வரிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னர் சில ஒலி நாடாக்கள் வெளியாகி வருகின்றன. ரஞ்சன் ராமநாயக்க பிரதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சட்டவாக்கத்திற்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும், நீதித்துறைக்கும் அழுத்தங்களை பிரயோகித்த முறைகள் குறித்த ஒலி நாடாக்களில் தெளிவாகவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட சிலருக்கு மரண தண்டனை தீர்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்புபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அலரி மாளிகையிலிருந்து கடந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் வேட்டைகளை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி மாத்திரமன்றி பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா ஆகியோருடன் அநுர குமார திசாநாயக்கவும் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2வது சொட்டு நாளை முதல்