உள்நாடு

குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO) – குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், கப்பம் பெறுவோர், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்புரைக்கு விசேட பொலிஸ் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் சரியான தகவல்களை இந்த விசேட பிரிவிற்கு வழங்க முடியும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக 24 மணித்தியால சேவைக்குரிய 011 2580518 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும். அல்லது 011 2588499 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும் எனவும் commadantstf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்கள் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பெர்பெர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

editor