உலகம்

ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

(UTV|INDIA)- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை கோரியிருந்தார். இதற்கமைய அவருக்கு இம் மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 15 நாட்களுக் சாதாரண பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அவர் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. இதனை அடிப்படையாக கொண்டே அவருக்கு மீண்டும் 15 நாட்கள் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயார் – ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை.

உக்ரைனுக்கு ஆதரவாகும் இத்தாலி

இஸ்ரேல் இராணுவத்தினால் காசாவில் 130 சுரங்கங்கள் அழிப்பு!