உலகம்

காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

(UTV|AUSTRALIA) – அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்ய அந் நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கோடிக்கணக்கான வன உயிரினங்களும் உயிரிழந்துள்ளன.

இந் நிலையில் பல மாதங்களுக்கு பிறகு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் அங்கு காட்டுத்தீயின் வேகம் குறைய தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்