உள்நாடு

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

(UTV|BADULLA) – பசறை – மடூல்சீமை வீதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பேரூந்து விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு