உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை

(UTV|COLOMBO) – கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை எமது அரசாங்கம் செயல்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இனை மேற்கோள்காட்டி இது தொடர்பில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை எமது அரசாங்கம் செயல்படுத்தவில்லை, புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யவில்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக இருக்க தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அமைச்சு