(UTV|PAKISTAN) – பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயங்குவதாகவும், ஆனால் இருபதுக்கு -20 கிரிக்கெட்டில் விளையாட தயார் எனவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் திட்டவட்டமாக எங்கள் நாட்டில்தான் போட்டி நடக்கும் என்று கூறிவிட்டது. இது பங்களாதேஷிற்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. பொதுவான இடத்தில் போட்டியை நடத்த பங்களாதேஷ் விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் வராவிடில் ஐசிசி-க்கு பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஒரு போட்டியை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாம். ஒரு போட்டியை டாக்காவில் நடத்தலாம் என புதிய யோசனையை வழங்கியது.
தற்போது இதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முற்றிலுமாக மறுத்துள்ளது. ‘‘தனிப்பட்ட முறையில் யோசனை வழங்கியது. அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்களை பங்களாதேஷ் வருமாறு அழைக்கிறது. இது விசித்திரமாக உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.