(UTV|US) – அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் அங்கு துணை இராணுவப் படை போன்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அந்த அமைப்புக்கு தலைவராக சுலைமானி என்பவர் இருந்தார். ஈரான் அரசுக்கு தேவையான உளவு தகவல்களை இவரது அமைப்பு அளித்து வந்தது. அதோடு சர்வதேச அளவில் ஈரானுக்கு ஆதரவான செயல்பாடுகளிலும் அந்த அமைப்பு இயங்கி வந்தது.
சுலைமானியின் நடவடிக்கைகளை கண்காணித்த அமெரிக்கா அவரால் அமெரிக்க இராணுவத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் ஆபத்து இருப்பதாக கருதியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்த சுலைமானி மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் அதிபர் அமெரிக்கா மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதற்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார்.