(UTVNEWS | MASKELIYA) – மஸ்கெலியா நகர்ப் பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் குழு நேற்று முன்தினம் 96 உணவு நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.
இதன் போது பாவனைக்கு உதவாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்கள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.