உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை

(UTV|NUGEGODA) – கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் செல்ல நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாதிவெலயில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் வைத்து அவர் நேற்று(04) கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 9 MM ரக 127 ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!