உலகம்

பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|MYANMAR) – மியான்மார்- தாய்லாந்து எல்லையில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

மியான்மர் – தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சன்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அந் நாட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஏவுகணை தாக்குதல் – ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரியும் கப்பல்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க கோரிக்கை

அமெரிக்காவில் கிரீன் கார்ட் தடை நீடிப்பு