(UTV|HAPUTALE) – ஹப்புத்தளையில் நேற்று(03) இடம்பெற்ற வான்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இரசாயன பகுப்பாய்வு குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
அதனுடன் விபத்தில் உயிரிழந்த விமான படை வீரர்கள் நால்வரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(04) இடம்பெறவுள்ளன.
இலங்கை வான்படைக்கு சொந்தமான வை – 12 ரக விமானம் நேற்று காலை ஹம்பாந்தோட்டை, வீரவில விமான தளத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயணித்த வேளையிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இதேவேளை, விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், வான்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.