வணிகம்

அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல

(UTV|COLOMBO) – அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவுடனும் சர்வதேச அரசியல் ரீதியிலும் தொடர்புகளை முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கையை மேற்கொள்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு இலங்கையில் காணி வழங்குவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் குத்தகை அடிப்படையிலானது. முன்னைய அரசாங்க காலப்பகுதியிலேயே இது மேற்கொள்ளப்பட்டது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்ரண தெரிவித்துள்ளார்.

Related posts

முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளுக்கான வரி நீக்கம்

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

DFCC வங்கி தமது கடனட்டைகளை சிறப்பு நிகழ்வொன்றுடன் மீள் அறிமுகம்