வணிகம்

செலிங்கோ காப்புறுதி ஊடாக பணியாளர்களுக்கு காப்புறுதிகள்

(UTV|COLOMBO) -இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் உயர்நிலைச் சங்கமான இணைந்த ஆடைச் சங்கமன்றமானது செலிங்கோ காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 350,000 பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆயுள், மருத்துவக் காப்புறுதிகளை வழங்குவதற்காக இணைந்துள்ளமை மூலம், இலங்கை ஆடைத் தொழிற்றுறையில் பணியாளர் நலன்புரியில் மிகப் பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 6 ரூபாயிலும் குறைவான தொகையே செலவாகும் செலிங்கோவின் ´ரன்சலுரக்ஷா´ காப்புறுதித் திட்டமானது ஒரு மில்லியன் ரூபாய்க்கான ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, விபத்து மரணம் ஏற்படின் 1.5 மில்லியன் ரூபாயை வழங்குவதோடு, பகுதியளவானதும் நிரந்தரமானதுமான அங்கவீனம் ஏற்படும் போது அதற்காக 500,000 ரூபாயும், முக்கியமான 39 நோய்களுக்கு 500,000 ரூபாய் வரையான காப்புறுதியும், மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டொன்று 30,000 ரூபாய் வரையில் மீளச் செலுத்துகையும், மரணச் செலவுகளுக்காக 30,000 ரூபாய் என்ற பங்களிப்பும் வழங்கப்படவுள்ளது.

செலிங்கோலைஃப் காப்புறுதி, செலிங்கோ பொதுக் காப்புறுதி, இணைந்த ஆடைச் சங்கமன்றம், இலங்கையின் ஆடைத் தொழற்துறைகளின் வெகுமதி – நலன்புரித் திட்டமான ´ரன்சலுபிரணாம பிரிவிலேஜ்´ என்ற திட்டத்தை முகாமைசெய்யும் சனல் 17 ஆகிய நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற ஆழமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஆடைத் தொழில் நிறுவனங்கள் விரும்பி இணையும் குழுக் காப்புறுதியாகப் புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய செலிங்கோலைஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர்.ரெங்கநாதன், தமது நிறுவனத்தின் ஆயுள் நிதியமானது 93 பில்லியன் ரூபாய் என்ற பலமான நிலையில் காணப்படுவதன் காரணமாக, விசேட விலையை வழங்கக்கூடியதாக அமைந்தது எனத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ´ஆடைத் தொழிற்றுறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென விசேடமாகப் பொருந்தும் வகையில் இந்தப் பிரத்தியேகக் காப்புறுதித் திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. பல மணிநேரக் கலந்துரையடல்களினதும் பேரம் பேசல்களினதும் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டமானது, வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து, ஆடைத் துறைக்கு மிக அவசியமான மனிதளவளத்தைப் பாதுகாக்கும் தேவைக்காக உருவாக்கப்பட்டது´ என்று குறிப்பிட்டார்.

இணைந்த ஆடைச் சங்க மன்றத்தின் செயலாளர் நாயகம் திரு. எம்.பி.டி. குரேகருத்துத் தெரிவிக்கும் போது, தொழிலாளர்களுக்குச் சாதகமான பலமான சட்டங்கள், கொள்வனவு செய்வோரால் சிறப்பான நடத்தைகள் வேண்டப்படுகின்றமை போன்றவற்றின் காரணமாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது தனது பணியாளர் படையை பாதுகாக்கின்ற, பேணி வளர்க்கின்ற, உயர்த்துகின்ற கலாசாரமாக மாறியுள்ளது ன்றார். பங்களிப்பு அல்லது நிறுவனத்தால் நிதியளிக்கப்படும் வகையில் ஆடைத் தொழிற்றுறையானது ஏற்கெனவே காப்புறுதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள போதிலும், பணியாளர்களும் நிறுவனங்களும் இந்தப் புதிய திட்டத்தைப் பின்பற்றத் தெரிவு செய்தால், நியமமான காப்புறுதிப் பொதிகளுடனான புதிய யுகமொன்றுக்குத் தொழிற்றுறையை எடுத்துச் செல்லுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் இணைந்த ஆடைச் சங்கமன்றத்தின் தலைவர் திரு. ஷாரத் அமலியன் தலைமையில் அதன் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆடைத் தொழிற்றுறை நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், சலிங்கோலைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, திரு. துஷாரரணசிங்க, செலிங்கோ பொதுக் காப்புறுதியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. பற்றிக் அல்விஸ், சனல் 17 இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான திரு. ஜுமார் பிரீணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இணைந்த ஆடைச் சங்கமன்றமென்பது இலங்கை ஆடைத்துறையானது உலகில் ஆடைகளை வழங்கும் முதல்நிலைக் கட்டமைப்பாகமாற வேண்டுமென்ற இலக்கை அடைவதற்காக அதை வழிநடத்தும் உயர்நிலை அமைப்பாகும். நாட்டின் முழு ஆடைத்துறையும் இந்த மன்றத்தின் கீழ் 2002 ஆம் ஆண்டு வந்ததுடன், உத்தியுடனான திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமாக, ஆடைத்துறையில் விரும்பப்படும் கோரிக்கை நிலையமாக இலங்கையை மாற்றும் முக்கிய நோக்கத்துடன் பணியாற்றுகிறது. ஏற்றுமதிப் புரள்வாக 5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் மேலதிகமாகக் காணப்படும் ஆடைத் தொழிற்துறையானது, இலங்கையின் வளர்ச்சிக்குப் பணியாற்றும் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். இலங்கையின் ஆடைத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த மன்றமான இணைந்த ஆடைச் சங்கமன்றமானது, 2025 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதிகளை 8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதிக்குக் கொண்டு வரும் நோக்குடன் பணியாற்றுகிறது.

செலிங்கோலைஃப் செயற்பட்டுவரும் தனது 31 ஆண்டுகளில் கடந்த 15 ஆண்டுகளாக, நாட்டின் காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. செயற்படுநிலையிலுள்ள காப்புறுதி ஒப்பந்தங்கள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை காப்புறுதி செய்துள்ள நிறுவனம், புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில், உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான ´பிரான்ட் ஃபினான்ஸ்´ நிறுவனத்தின் விருதை 2019ஆம் ஆண்டில் செலிங்கோலைஃப் வென்றதோடு, இலங்கையின் வர்த்தகத்துக்கான சர்வதேச சம்மேளனமானதால் (ICCSL) இவ்வாண்டில் அதிகம் வியக்கப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் தெரிவானது. அத்தோடு, இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான வேள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை, தொடர்ச்சியான 6 ஆவது ஆண்டாகவும் 2019 ஆம் ஆண்டு செலிங்கோலைஃப் வென்றது. மேலதிகமாக, SLIM-Nielsen நிறுவனத்தால் நாட்டின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாகவும் அந்நிறுவனம் தெரிவாகியுள்ளது.

Related posts

உரங்களை வழங்க முறையான வழிமுறை

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

இலங்கைக்கான நேரடி விமான சேவையில் சர்வதேச விமான நிறுவனங்கள்