(UTV|COLOMBO) – ரயிலில் சுமார் 50 யாசகம் கேட்பவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 17 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் ரயில்கள் யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து ரயில் திணைக்கள அதிகாரிகளால் குறித்த தினத்திலிருந்து விசேட கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது ரயிலில் யாசகம் பெறும் பெண் ஒருவரிடம் இருந்து இரண்டு இலட்சத்து 14 ஆயிரத்து 290 ரூபா மீட்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலாக ரயிலில் யாசகம் பெற்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.