உள்நாடு

நேவி சம்பதிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

(UTV|COLOMBO) – நேவி சம்பத் என அறியப்படும் கடற்படையின் முன்னாள் புலனாய்வாளரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையளித்துள்ளது.

சுமார் 16 மாதங்களாக அவர் குறித்த விவகாரத்தின் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வரும் நிலையிலேயே கடும் நிபந்தனைகளின் கீழ் மேல் நீதிமன்றம் இந்த பிணையை அளித்துள்ளது.

எவ்வாறாயினும் நேற்று மாலை வரையில் அந்த பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நேவி சம்பத் எனும் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2018 ஆகஸ்ட் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒவ்வொரு பக்கமும் தாவிக் கொண்டிருக்கின்ற தவளை அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டத்தை கொண்டு வருவோம் – சஜித் பிரேமதாச

editor

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும் – சஜித்

editor