வணிகம்

யாழ்ப்பாணத்திற்கும் அதிவேக நெடுஞ்சாலை

(UTV|JAFFNA) – மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

.கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுவதுடன் இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேக நெடுஞ்சாலையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

இதேவேளை கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை அமைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

இன்று முதல் அமுலாகும் வகையில் 12 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி