உள்நாடு

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு

(UTVNEWS | COLOMBO) -அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை  அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம் பெற்ற   ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு  தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார  காலத்திற்குள் தகுந்த தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

நான்காவது டோஸ் யாருக்கு?

சீன கடன்கள் தொடர்பில் ரணிலின் விசேட கோரிக்கை