கேளிக்கை

‘சூரரைப் போற்று’ திடீர் அறிவிப்பு

(UTV|INDIA) – சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு தொடர்பில் இன்று(01) குறித்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘சூரரைப் போற்று’ படத்தின் செகண்ட்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட்லுக் சூர்யா ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்காரா இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சியில் நடித்தேன்- அமலாபால் (photos)

ஆசியாவின் முதல் பகிர் திரை திரைப்படம் ‘பிகினிங்’