உள்நாடு

இந்த வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

(UTV|COLOMBO) – போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் 2019 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 1741 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹெரோயின் போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் 40 ஆயிரத்து 814 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 7 ஆயிரத்து 75 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் 7 ஆயிரத்து 75 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

41 கிலோ கிராம் செயற்கை போதைப்பொருட்களுடன் 2 ஆயிரத்து 223 சந்தேகநபர்களும் இந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 182 பேர் கைது

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது