உள்நாடு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது தொடர் நாளை மறுதினம்

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது அத்தியாயத்தின் முதலாம் உறுப்புரைக்கு அமைய, பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதற்கமைய, கடந்த 2 ஆம் திகதி, விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்!

‘முட்டாள் போராட்டத்தினால் ரணில் ஜனாதிபதியானார்’ – விமல்