(UTV|COLOMBO) – நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-வடகொரியா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களை சோதித்து வருகிறதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளதுடன் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என்பதை கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது