கேளிக்கை

சமந்தா – சைதன்யா தம்பதி இடையே கருத்து வேறுபாடு

(UTV|COLOMBO) – சமந்தா, நாக சைதன்யா தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

இருவரும் சேர்ந்து நடித்த மஜிலி படம் இந்த ஆண்டு திரைக்கு வந்தது.

இந்நிலையில் நாகசைதன்யா குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சில விசேஷ நிகழ்ச்சிகளில் சமந்தா தவிர குடும்பத்தார் அனைவருமே பங்கேற்றனர். இது பற்றி கேட்டதற்கு, சமந்தா ஷூட்டிங்கில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது.

நாகர்ஜுனா, நாகசைதன்யா, அகில் என மூவருமே படங்களில் நடித்து வருவதுடன், அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் சமந்தா பங்கேற்காதது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது.

இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இது பற்றி இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

Related posts

விஜய் சேதுபதியின் மிரட்டலான அடுத்த அதிரடி!

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்

லீக் ஆகியது ‘தர்பார்’