வணிகம்

கட்டழகானதும் நம்பிக்கையானதுமான Stonic அறிமுகமானது

(UTV|COLOMBO) – இலங்கையின் மோட்டார் வாகனச் சந்தையில் காணப்படும் ஆர்வத்தைமீளவும் தூண்டுவதற்கு உறுதியெடுத்துள்ள Kia நிறுவனம், ஒரே மாதகாலத்துக்குள் தனது இரண்டாவது புத்தம் புதிய வாகனவகையைக் கொழும்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Kia நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளகார்களில் அழகானகார்களில் ஒன்றாகவும், விரிவடைந்து வரும் சிறுவகை SUV பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்னை கவரக் கூடிய புதிய கார்களில் ஒன்றாகவும் கருதப்படும் Kia Stonic, Kia வின் ஐரோப்பிய, கொரிய வடிவமைப்பு ஸ்டூடியோக்களுக்கு இடையிலானநெருக்கமான இணைப்பின் விளைவாக உருவானதோடு, கொரியாவிலுள்ள Kia வின் சொஹாரி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.

SUV வடிவமைப்பால் உந்தப்பட்ட ஸ்டோனிக்கானது, Kia நிறுவனத்தின் மிகவும் மேம்பாடான இலகு எடை கொண்ட மூன்று சிலிண்டர் 1 லீற்றர் டேர்போசார்ஜிங் கொண்ட நேரடி பெற்றோல் செலுத்துகை (turbocharged gasoline direct injection) இயந்திரத்தைக் கொண்டதோடு, 120 தடுப்பு குதிரை வலுவையும் (BHP), ஏழு வேகத்தையும் (7 Speed) இரண்டு கிளட்ச் பரிமாற்றத்தையும் கொண்டதாகும். இதன் காரணமாக இயந்திர செயற்றிறனும் பெறுபேறும் அதிகரிப்பதோடு, உடனடியான வேக அதிகரிப்பை வழங்குகிறது. அத்தோடு, விரைவாகக் கையாளும் திறனையும் உயர்ந்த எரிபொருள் செயற்றிறனையும் இது வழங்குகிறது.

இவ்வாகனத்தின் அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Kia Motors (லங்கா) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. அன்ட்ரூபெரேரா, ´எமது கார்களில் இலங்கையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்பை, Stonic கொண்டுள்ளது. கண்ணைக் கவர்கின்றதும் நம்பிக்கையை அளிப்பதுமான சிறுவகை SUV ஒன்றாக, உண்மையான ஐரோப்பிய வடிவமைப்பின் கவர்ச்சியையும் கொண்டுள்ளது. உள்ளேயும் வெளியேயுமென அதிகளவு விருப்பமைவு பெற்றகாராகவும் Stonic உள்ளதோடு, இந்த வர்க்ககார்களில் அதிக ஸ்மார்ட் (Smart) கார்களில் ஒன்றாகவும் இது உள்ளது. கையாளுகை, பாதுகாப்பு, சௌகரியம், இலகு தன்மை ஆகியவற்றுக்காக பல்வேறான தொழில்நுட்ப வடிவமைப்புகளை இது கொண்டுள்ளது´ என்று தெரிவித்தார்.

இந்த வாகனம், Kia தனித்துவமான ´புலி மூக்கு´ ஜன்னல் வடிவமைப்பானது நவீனமயப்படுத்தப்பட்டு, முப்பரிமாண குரோமிய வடிவமைப்போடு காணப்படுகிறது. அதேபோன்று, காரின் பிற்புற வடிவமைப்பானது (C-pillars) ஏற்கெனவே காணப்படும் Kia வடிவங்களை ஒத்ததாக உள்ளது.

இது, Stonic காரானது பலமானதும் இலகு எடையுடையதுமான அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, அதனதுடைய உடற்கட்டமைப்பானது அதிகளவான பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய உடற்கட்டமைப்பின் மிக அதிகளவிலான பகுதியானது மேம்படுத்தப்பட்ட உயர் பலத்துடனான உருக்கினால் உருவாக்கப்பட்டுள்ளதோடு, அதனுடைய இறுக்கத் தன்மையையும் பாதுகாப்பையும் அதிகரிப்பதற்காக 98 மீற்றர் நீளமான கட்டமைக்கப்பட்ட ஒட்டு வேலையையும் கொண்டுள்ளது. வாகனத்தின் பாதுகாப்பில் அதனுடைய தொழில்நுட்பமும் முக்கிய பங்கை வகிக்கிறது. Stonic இன்முன் சில்லானது இலத்திரனியல் ஸ்திரத்தன்மைக் கட்டுப்பாட்டு வசதியைக் கொண்டுள்ளதோடு, அதனுடைய நியமமாகமுயை வின் வாகன ஸ்திரத்தன்மை முகாமைத்துவக் கட்டமைப்பையும் கொண்டுள்ளது.

இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள Kia வாகன வடிவங்களில், Stonic காரானது அதனுடைய கட்டழகு, நம்பிக்கையை ஊக்குவிக்கும் இயங்கியல், நேரடியானதும் உடனடியானதுமான பதில்கள் ஆகியவற்றுக்கு அதிக முன்னுரிமையை வழங்குகிறது. Stonic இல் முன், பின் Suspension ஏற்பாடுகள் காணப்படுவதோடு, காரொன்றைப் பொறுத்தவரை இது தனித்துவமானதாகும். இதன் மூலம் ஓட்டுவதற்கு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொடுக்கின்றது.

Stonic இன் வெளிப்புறத்தைப் போன்றேஉள் வடிவமும் ஐரோப்பிய வடிவமைப்பால் தூண்டப்பட்டுக் காணப்படுகிறது. ஸ்மார்ட் பொதியிடல் (Smart Packaging) காரணமாகக் காரில் பயணிக்கின்ற அனைவருக்கும் போதியளவிலான இடவசதியை இது வழங்குகிறது. வாகன உட்புறமானது சாரதிக்கும் பயணிகளுக்கும் அதிகளவான இட வசதியை வழங்குவதோடு, அதனுடைய 352 லீற்றர் பொதிவைக்கும் பகுதியானது இரட்டை நிலைத் தரையைக் கொண்டுள்ளது. இதனால்,வாகனத்தைக் கொண்டிருப்போர் விரும்பிய நேரத்தில் அதை விரிவாக்கவும் குறுக்கவும் வசதி ஏற்படுவதோடு,பின் ஆசனங்கள் மடிக்கப்பட்டால், மட்டமான தரையை வழங்குகிறது. பெரிய பொதிகளை உட்செலுத்துவதற்காக ஸ்டோனிக்கின் பின்புறமானது பெரிய கதவைக் கொண்டுள்ளது.

Kia Stonic வாகனமானது 4.95 மில்லியன் ரூபாய்க்கும் 5.5 மில்லியன் ரூபாய்க்கும் இடையில் விலையிடப்பட்டுள்ளதோடு, ஐந்து ஆண்டுகள் அல்லது 150,000 கிலோ மீற்றர்கள் என்ற உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது.

Kia Motors (லங்கா) நிறுவனமானதுமுயை வணிகக்குறியை 1996 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்தோடு, அண்மையில் அந்நிறுவனமானது கூட்டாண்மைக் கட்டமைப்பில் மாற்றமொன்றுக்குள் உள்ளாகியிருந்தது. மாலபேயில் (Malabe) 800 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய வணிக ஒருங்கமைப்பு நிலையமானது, வலையமைப்பால் உரிமைப்படுத்தப்பட்ட துணை நிறுவனங்களினதும் உரிமை பெற்ற நிறுவனங்களினதும் விற்பனை, சேவை, உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஒருமையமாக அமைந்துள்ளது. இந்தப் புதிய செயற்பாட்டுக் கட்டமைப்பானது, இலங்கையில் மிகவும் பிரபலமான வாகன வணிகக்குறிகளில் ஒன்றான Kia நிறுவனத்தின் வளர்ச்சியின் புதிய கட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய இரண்டு ஐஸ் கிரீம்களை அறிமுகப்படுத்தும் Pelwatte

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

இன்றைய நாணய மாற்று விகிதம்