வணிகம்

விசா கட்டண விலக்களிப்பை மேலும் நீடிப்பு

(UTV|COLOMBO) – 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசா கட்டண விலக்களிப்பை மேலும் நீடிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலவச விசா நடைமுறையானது அடுத்தாண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த அரசாங்கத்தினால் இலங்கைக்கு விசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய விசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48 நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து