(UTV|COLOMBO) – இலங்கையின் எழுந்து வரும் பிரபல நட்சத்திர வீரரான குசல் மென்டிஸ் மீளவும் ரசிகர்கள் இடையே கதைக்கப்படும் நபராக திகழ்கிறார். ஆனால் அது கிரிக்கெட் தொடர்பில் அல்ல.
அது அண்மையில் குசல் மென்டிஸ் புதிய டிசைனில் பச்சை குத்தியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் அதற்கு இரசிகர்கள் தங்களது விருப்பத்தினையும் அவ்வாறே எதிர்ப்பினையும் தெரிவித்திருந்தனர்.
அதனை பார்க்கும் போது கடலில் மிதக்கும் கப்பலை போன்றது. அது தவிர்ந்த சில அம்சங்களும் அவரது பச்சைக் குத்தலில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் இது வித்தியாசமான ஒரு ஆக்கபூர்வம் என இரசிகர்கள் மேலும் தெரிவித்து வருகின்றனர்.