உள்நாடுசூடான செய்திகள் 1

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO) – சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பனிஸ்டர் பிரான்ஸிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(30) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், கடந்த மாதம் 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளை அடுத்து, கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸை இன்று(30) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான், கடந்த 17ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், விளக்கமறியல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று (30) பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்