வணிகம்

புறக்கோட்டையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைவு

(UTV|COLOMBO) – புறக்கோட்டை சந்தையில் சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 60 தொடக்கம் 100 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் குறைவடைந்துள்ளது.

கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் துருக்கி மற்றும் நெதர்லாந்தில் இருந்து அவை கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ கோதுமை மா 75 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பண்டிகைக் காலப்பகுதியில், உணவுப் பொருட்களை எந்தவித தட்டுப்பாடுமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்