(UTV|COLOMBO) – நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
மத்திய வங்கி இதற்கான விதிகளை அடக்கிய திருத்தச் சட்டமூலமொன்றை நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
தற்போது பண வைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்த முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நுண்நிதி நிறுவனங்கள் அடங்கலாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்தும் நோக்கில் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலத்தை நிதியமைச்சு, அமைச்சரவையில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், இது நடைமுறைக்கு வரும் என்று இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)