கேளிக்கை

ஆரம்ப கால கிறிஸ்மஸ் கரோல்களின் ஒரு தொகுப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – ஆரம்ப கால கிறிஸ்மஸ் கரோல்களின் சிங்களத் தொகுப்பொன்றினை கொழும்பு ஓரியண்டல் கொயர் குழுமத்தினர் இன்று (23) வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற இசைக்கலைஞர் அருட்தந்தை ஜகோம் கோன்சால்வ்ஸ் இந்த சிங்கள கரோலை, ‘தெவிடு உபன்னேயா’ (இயேசு பிறந்தார்) எனும் தொனிப்பொருளில் 1700 களின் நடுப்பகுதியில், கர்நாடக, நாட்டுப்புற மற்றும் வன்னம் ஆகிய இசை வகைகளின் நிர்மாணிப்புடன் இயற்றியுள்ளார்.

கொழும்பு ஓரியண்டல் கொயர் குழுமம் ஒன்றுக்கும் விதிவிலக்கல்ல என நிரூபிக்கும் வகையில் குறித்த ‘தெவிடு உபன்னேயா’ தொகுப்பு பார்வையாளர்களை கவர்ந்துள்ளமை விசேடமாகும்.

கொழும்பு ஓரியண்டல் கொயர் என்பது இலங்கையின் முதல் மற்றும் முன்னோடி பாடகர்களின் குழுவாகும், இது உண்மையான பாரம்பரிய, அரை பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற இசை வகைகளை ஊக்குவிக்கிறது.

ஒரு குறுகிய காலத்தில், கொழும்பு ஓரியண்டல் கொயர் உருவாகி, சமூகத்தில் ஆழமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் முழுவதும் வலுவான மற்றும் வளர்ந்து வரும் இசை இருப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Related posts

‘DOCTOR’ ரிலீஸ் திகதி இதுதானாம்

மருத்துவமனையில் சிம்பு

மற்றவர்களுக்காக வாழ முடியாது