விளையாட்டு

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலந்தர் ஓய்வு

(UTV|COLOMBO) – தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளரான வேர்னன் பிலந்தர் (Vernon Philander) சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் பின்னர் அவர் ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா சார்பாக 60 டெஸ்ட், 30 சர்வதேச ஒருநாள் மற்றும் 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள வேர்னன் பிலந்தருக்கு தற்போது 34 வயதாகின்றது.

2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா சார்பாக சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்ற அவர் சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் விளையாடி 4 வருடங்கள் கடந்துவிட்டன.

2007 ஆம் ஆண்டில் சர்வதேச இருபதுக்கு 20 அறிமுகம் வேர்னன் பிலந்தருக்கு கிடைத்த போதிலும் அதன் பிறகு இதுவரை ஒரு சர்வதேச இருபதுக்கு 20 போட்டியிலேனும் அவர் விளையாடவில்லை.

வேர்னன் பிலந்தர் கடந்த காலத்தில் அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதுடன் பல சந்தர்ப்பங்களில் உபாதைக்குள்ளான போட்டிகளை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை

இலங்கையில் பாதுகாப்பு சிக்கல் இல்லை – சங்கக்கார உறுதி

எட்டு வருட கனவு நனவானது